அதன் ஆகக் குறைந்த மாதாந்த சந்தாக் கட்டணம், விளம்பரங்களுடன் கூடிய நிலையான திட்டம் – மாதத்திற்கு 2 டொலர்களிலிருந்து 7.99 டாலர்களாக அதிகரிக்கப்படவுள்ளது.
விளம்பரங்கள் இல்லாத நிலையான திட்டம் மாதத்திற்கு 2.5 டொலர்களிலிருந்து அதிகரித்து 18.99 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
அதே நேரத்தில் பிரீமியம் திட்டம் மாதத்திற்கு 3 டொலர்களிலிருந்து 23.99 டொலர்களாக உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது. கூடுதல் உறுப்பினரைச் சேர்ப்பதற்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
புதிய விலைகள் புதிய சந்தாதாரர்களுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும், அதே நேரத்தில் ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் தங்கள் அடுத்த மாத பட்டியலில் விலை மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நிகழ்ச்சிகளுக்கான முதலீடுகள் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, போர்த்துகல் மற்றும் அர்ஜென்டினாவில் உள்ள பெரும்பாலான திட்டங்களில் கட்டணங்களை மாற்றி வருவதாக Netflix அறிவித்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.