Reading Time: < 1 minute

கனடாவில் நூதன முறையில் வாகனங்கள் கொள்ளையிடப்படுவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன விபத்துக்களை ஏற்படுத்தி வாகனங்கள் கொள்ளையிடப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக டொரன்டோ பெரும்பாக பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வாகனங்களுடன் சிறிது அளவிலான மோதலை ஏற்படுத்தி சாரதி வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்து அறிவதற்காக கீழே இறங்கும்போது குறித்த சாரதியுடன் கைகலப்பில் ஈடுபட்டு வாகனத்தை கொள்ளையிடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே வாகன விபத்துகளின் போது சாரதிகள் இந்த விடயம் தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.