Reading Time: < 1 minute
கனடாவின் ஒன்ராறியோவில் சுற்றுலா சென்ற இந்திய மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பஞ்சாபிலிருந்து உயர் கல்வி கற்பதற்காக கனடாவுக்கு கடந்த ஆண்டு வந்தவர் Navkiran Singh (20).
அவர் ஒன்ராறியோவிலுள்ள Eldorado பூங்காவிற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அங்கிருந்த நீர்நிலையில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கல்வி கற்கச் சென்ற தங்கள் மகன் பரிதாபமாக பலியான நிலையில், Navkiran Singhக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்காக அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவுமாறு அவரது பெற்றோர் இந்திய அரசிடம் மனமுருக கோரிக்கை வைத்துள்ளார்கள்.