Reading Time: < 1 minute

கனடாவில் நாய் ஒன்றின் உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் ஒன்று பெருந்தொகை அபராதத்தை விதித்துள்ளது.

வீட்டு பராமரிப்பு தாதி ஒருவரை குறித்த தம்பதியினரின் வளர்ப்பு நாய் கடித்து காயப்படுத்திய சம்பவம் குறித்த வழக்கின் தீர்ப்பின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹாலிபெக்ஸ் பகுதியைச் சேர்ந்த குறித்த தம்பதியினருக்கு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 61000 டொலர்களை நட்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் நீதிமன்ற கட்டணங்களாக நான்காயிரம் டாலர்களை செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நோவா ஸ்கோசியா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் கிரிஸ்டா பிரதர்ஸ் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

நாயை கட்டுப்படுத்த தவறியதாக நீதிமன்றம் குறித்த தம்பதியினர் மீது குற்றம் சுமத்தியிருந்தது.

புல்டோக் ரக நாய் குறித்த தாதியை கடுமையாக கடித்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாய்கடியினால் குறித்த தாதி பல இடங்களில் காயமடைய நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறு எனினும் இவ்வளவு பாரிய தொகையை செலுத்துவதற்கு தன்னிடம் பணம் இல்லை என குறித்த தம்பதியினர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.