கடந்த 2007ம் ஆண்டு வெளியான நான் அவனில்லை தமிழ்த் திரைப்பட பாணியில் கனடாவில் நூறு பெண்களை காதல் வலையில் சிக்க வைத்த நபர் ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பல பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இணைய வழியில் தொடர்பு கொண்டு இவ்வாறு பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
தனது பெயர் தொழில் வாழ்க்கை சம்பவங்கள் போன்ற தகவல்களை மாற்றி மாற்றி இவ்வாறு நூறு பெண்கள் வரையில் குறித்த நபர் ஏமாற்றியுள்ளார்.
சுமார் ஒரு தசாப்த காலத்திற்கு முன்னதாக மூன்று மோசடி சம்பவங்கள் தொடர்பில் இந்த நபர் தண்டிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இணைய வழியில் டேட்டிங் செயலிகள் ஊடாக குறித்த கனேடியப் பெண்களை ஏமாற்றியுள்ளார்.
ஜோன் மேயர், ஜோன் மேயர்ஸ், ஜோன் புல்டர், ஜோன் மாடலஸ் என பல்வேறு பெயர்களில் இந்த நபர் பெண்களுடன் தொடர்பு கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல பெண்கள், தாம் எவ்வாறு ஏமாற்றப்பட்டனர் என்பது பற்றிய விபரங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். நீதிமன்றில் இந்த தகவல்களை குறித்த பெண்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
முகநூல் வழியாக இந்த நபர் பல பெண்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தி நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.