Reading Time: < 1 minute

கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த அலி அல்தாலவி என்ற 5 வயது சிறுவன், தனது 4 வயதிலேயே ஐக்யூ தேர்வில் 160 புள்ளிகள் பெற்று உலகளவில் உள்ள 0.1 சதவீத முன்னணி அறிவுத்திறன் கொண்ட சிறுவர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.

Tamil Business Directory

உலகின் பழமையான மற்றும் புகழ்பெற்ற உயர் ஐக்யூ அமைப்பான ‘மென்சா’வில் இணைவதற்கு 130 அல்லது அதற்கு மேற்பட்ட ஐக்யூ புள்ளிகள் தேவை. 160 புள்ளிகள் பெற்ற அலி, கடந்த ஆண்டு கனடாவில் மென்சா அமைப்பில் சேர்க்கப்பட்ட இரு 4 வயது சிறுவர்களில் ஒருவர் ஆவார்.

அலீயின் சகோதரி லமீஸ் (7) மற்றும் சகோதரன் உமர் (10) ஆகிய இருவருமே ஏற்கெனவே மென்சா அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கணிதம் மற்றும் வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்ட அலி, பல்வேறு நாடுகளின் கொடிகளைப் பார்த்து அவற்றின் பெயர்களைத் துல்லியமாகக் கூறுகிறார்.

அலிக்கு 2 வயதாக இருக்கும்போதே புதிர் விளையாட்டுகள் மற்றும் புதிய விஷயங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் இருந்ததாகத் அவரது தாய் அலா ஹாசன் தெரிவித்துள்ளார்.

கணிதத்தைத் தவிர, அலிக்கு கால்பந்து விளையாட்டிலும் அதிக ஆர்வம் உண்டு. அவருக்கு விருப்பமான வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பதால், அவரைப் போலவே தலைமுடியை அலங்கரித்துக் கொண்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.