கனடாவில் நபர் ஒருவர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி படுகொலை செய்ததாக, எட்டு சிறுமிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட சிறுமிகளில் மூன்று பேர் 13 வயதான சிறுமிகள் உள்ளடங்குவதாகவும், ஏனையர்கள் பதின்ம வயதினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
யோர்க் வீதி மற்றும் யுனிவர்சிட்டி வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 59 வயதான நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நபர் மீது எட்டு சிறுமிகள் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட சிறுமியர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த சிறுமியருக்கு இடையிலான தொடர்பு என்ன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சமூக ஊடகங்களின் ஊடாக இந்த சிறுமியர் ஒருவரை ஒருவரை தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
றொரன்டோவில் இந்த ஆண்டில் இடம்பெற்ற 68ம் படுகொலைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உயிரிழந்த நபரிடமிருந்து மதுபான போத்தலை சிறுமிகள் பலவந்தமாக பறித்து எடுக்க முயற்சித்த போது ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமையே இந்த கொலைக்கான காரணம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுமிகள் நடாத்திய தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.