Reading Time: < 1 minute
நயகராவின் சென் கதரீன்ஸ் பகுதியில் அமைந்துள்ள நகைக்கடையொன்றில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவத்துடன் ஐந்து பேர் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுத்தியலைப் பயன்படுத்தி காட்சியறையில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நயாகரா பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறிப்பிட்டளவு நகைகளை குறித்த சந்தேகநபர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளையிட்டுச் சென்றவர்களை தடுக்க அருகாமையில் இருந்தவர்கள் முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் வாகனமொன்றில் தப்பிச் சென்றுள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.