கனடாவில் தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட மக்களை இலக்கு வைத்து கப்பம் கோரிய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கப்பம் கோரல் சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பீல் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் கப்பம் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறான சுமார் 29 சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் ஐந்து பேர் கப்பம் கோரல்கள் தொடர்பில் கைதாகியுள்ளதுடன் ஆயுதங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.
ரொறன்ரோ பெரும்பாக பகுதிகளில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிலையங்கள் மீது இதுவரையில் ஒன்பது தடவைகள் கப்பம் கோரி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.