கனடாவில் கடுமைப் பனிப்பொழிவுடனான காலநிலையில் சிக்கிக் கொண்ட இரண்டு சுற்றுலாப் பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இவ்வாறு பனிமலையொன்றில் சிக்கியுள்ளனர்.
மலைப் பகுதியில் 24 மணித்தியாலங்கள் சிக்கியிருந்து உயிருடன் மீட்கப்பட்டமை அதிசயமானது என மீட்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சுற்றுலாப் பயணிகள், வான்கூவாரின் நோர்வன் நீர்வீழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது இருள் சூழ்ந்து கொண்டதனால் வழி தவறிவிடடனர்.
தங்களிடமிருந்த அலைபேசியையும் இவர்கள் தொலைத்துவிட்டனர்.
இருவரும் குளிருடனான காலநிலைகளில் இரவில் அணியும் ஆடைகளையும் எடுத்துச் சென்றிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான குளிருடானான காலநிலைக்கு மத்தியில், தெய்வாதீனமாக இருவரும் உயிர் தப்பியுள்ளனர் என மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.