Reading Time: < 1 minute

கனடாவில் நகையகம் ஒன்றில் கொள்ளையிட வந்தவர்களை தும்புத்தடியை பயன்படுத்தி கொள்ளையை தடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தும்பு தடியைக்கொண்டு தாக்கி கடையின் உரிமையாளர் கொள்ளையர்களை விரட்டியடித்துள்ளார்.

கனடாவின் மார்க்கம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நகையகத்தின் உரிமையாளரான ஜெர்ரி சொரானி என்ற நபரே இவ்வாறு கொள்ளையர்களை விரட்டியுள்ளார்.

கடந்த 16 ஆண்டுகளாக நகையகம் நடத்தி வருவதாக ஜெர்ரி சொரானி தெரிவிக்கின்றார்.

முகமூடி அணிந்து கொண்ட மூவர் கடைக்குள் பிரவேசித்து காட்சியறையில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையிடும் நோக்கில் சுத்தியல்களைக் கொண்டு காட்சிக்கூடங்களை தாக்கியதாக அவர் தெரிவிக்கின்றார்.

விரைந்து செயல்பட்ட கடையின் உரிமையாளர் தும்புத்தடியால் தாக்கி கொள்ளையர்களை விரட்டி அடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொள்ளை முயற்சி சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது. இந்தக் கொள்ளை சம்பவத்தின் போது எந்த ஒரு பொருளும் களவாடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.