Reading Time: < 1 minute
கனடாவில் துப்பாக்கிகள் மற்றும் பொலிஸ் உடைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இரண்டு துப்பாக்கிகள், பொலிஸ் உபகரணங்கள் மற்றும் அங்கிகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக ரெஜினா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆயுதங்கள் மற்றும் பொலிஸ் சீருடைகள் என்பன இவ்வாறு களவாடப்பட்டுள்ளமை உடன் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரைப் போன்று போலியாக சீருடைகளை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய சாத்தியம் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிறீன் மோஸ் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடமொன்றுக்குள் புகுந்து ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
களவாடப்பட்ட பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் 306-777-6500 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.