Reading Time: < 1 minute

கனடாவில் திரட் மில் (Treadmills) எனப்படும் நடை மற்றும் ஓட்டப் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் உடல் பயிற்சி இயந்திரம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இந்த உடல் பயிற்சி இயந்திரங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில வகை உடல் பயிற்சி இயந்திரங்கள் திடீரென தானாகவே வேக மாற்றங்களைச் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு திடீரென வேக மாற்றம் செய்யப்படும் போது பயிற்சியில் ஈடுபடுவோர் உபாதைகளுக்கு உள்ளாக நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கனடாவில் இவ்வாறு நடை பயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

குறிப்பாக Horizon Fitness T101-05 folding treadmills எனப்படும் மடிக்கக் கூடிய உடற் பயிற்சி இயந்திரங்கள் எதிர்பாராத விதமாக வேக மாற்றங்களுக்கு உள்ளாகுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கோளாறு ஏற்படும் இயந்திரங்கள் கனேடிய சந்தையிலிருந்து மீள பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.