கனடாவில் நீண்ட பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் கடவுச்சீட்டு புதுப்பித்தல் நடவடிக்கை முழுவேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட 19 மாதங்களுக்கு பிறகு கனடா- அமெரிக்க எல்லைகள் திறக்கப்பட உள்ளன. இதனால் சாலை மார்கம் அதிகமானோர் இரு நாடுகளுக்கும் சென்றுவரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, கலப்பு தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் அமெரிக்காவுக்குள் நுழையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, 4 மில்லியன் கனேடிய மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்திருக்கும் என்றே கூறப்படுகிறது.
கனடாவில் தொற்றுநோய் பரவல் காலகட்டம் முழுமையும் அவசர கடவுச்சீட்டு சேவைகள் செயல்பட்டு வந்துள்ளன, ஆனால் எல்லைகள் மூடப்பட்டு பொது சுகாதார நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதால், பெரும்பாலான மக்கள் தங்கள் கடவுச்சீட்டுகளை சிறிதும் பயன்படுத்தவில்லை.
கொரோனா பரவலுக்கு முந்தைய ஆண்டில் மட்டும் கனடாவில் 2.3 மில்லியன் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் வெறும் 363,225 கடவுச்சீட்டுகளே அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஆண்டில் செப்டம்பர் 30ம் திகதி வரையான காலகட்டத்தில் 467,541 புதிய கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்b அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம் உட்பட அமெரிக்க- கனடா எல்லைகள் திறக்கப்பட்டாலும், தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றே கனேடிய அரசாங்கம் கோரிக்கை வைக்கின்றது.