Reading Time: < 1 minute
கனடாவின் பூங்காக்கள் மற்றும் தாவர பண்ணைகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் டொரன்டோவின் பெய்ரே பகுதியில் சுமார் 100 டாலர்கள் பெறுமதியான இரண்டு தாவரங்கள் களவாடப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு பல்வேறு இடங்களில் தாவரங்கள் களவாடப்படும் சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன.
வீடுகளில் வளர்க்கப்படும் சிறு தாவரங்கள் முதல் பூங்காக்களில் வளரும் தாவரங்களும் இவ்வாறு களவாடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தாவரங்கள் களவாடப்படுவதனால் பாரியளவு நட்டம் ஏற்படுவதாக பூங்கா உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தாவரங்கள் திருடப்படுவதனை தடுக்கும் நோக்கில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.