Reading Time: < 1 minute

கனடாவில் தாக்குதல் சம்பவமொன்றுடன் தொடர்புடைய இரண்டு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் கென்சிங்டன் மார்க்கெட் பகுதியில் நடந்த வன்முறையில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு ஆணையும் பெண்ணையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 1ம் திகதி, அதிகாலை 2 மணியளவில், ஒரு நபர் காலேஜ் ஸ்ட்ரீட் மற்றும் அகஸ்டா அவென்யூ சந்திப்பில் சாலையை கடக்கும்போது, ஒரு வாகனம் அவரை மோதியது.

வாகன சாரதி காயமடைந்த நபருடன் மோதலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், மேஜர் ஸ்ட்ரீட்டில் வாகனத்தை நிறுத்திய சாரதி மற்றும் அவருடன் இருந்த பெண் பயணி, பாதிக்கப்பட்ட நபரை சந்தித்தனர்.

இதற்கிடையில், ஓட்டுநர் கத்தியை எடுத்துத் தாக்கி, அந்த நபருக்கு தீவிர காயங்களை ஏற்படுத்தியதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்குப் பிறகு, இருவரும் மீண்டும் காரில் ஏறி, சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் நபருக்கு கடுமையான, வாழ்நாள் முழுவதும் பாதிக்கும் வகையிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலீசாரை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.