Reading Time: < 1 minute

கனடாவில் தற்கொலை அவசர உதவி எண்ணுக்கு மூன்று லட்சம் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஓராண்டு காலப்பகுதியில் 988 என்ற தற்கொலை தவிர்ப்பு உதவி அவசர அழைப்பு பிரிவிற்கு இவ்வாறு மூன்று லட்சம் தொலைபேசி அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய பழக்க அடிமைத்துவம் மற்றும் உளச்சுகாதார நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தற்கொலை செய்து கொள்ள எண்ணம் உடையவர்கள் மற்றும் வேறு அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அவசர அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஓர் 24 மணித்தியால அவசர அழைப்பு சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சேவை தொடர்பில் மக்கள் அறிந்து கொண்டால் கூடுதல் எண்ணிக்கையிலான தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொலைபேசி அழைப்பிற்காக சராசரியாக காத்திருக்க வேண்டிய கால அவகாசம் 44 செகண்ட்கள் என தெரிவிக்கப்படுகிறது.