Reading Time: < 1 minute

கனடாவில் தமிழ் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும் திரையரங்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக குறித்த திரையரங்கில் ஹிந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட இந்திய திரைப்படங்கள் அதிக அளவில் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் இங்கு இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரொறன்ரோவின் வுட்சயிட் திரையரங்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மைய நாட்களாக இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.