Reading Time: < 1 minute

கனடாவின் ஆல்பர்டா பகுதியில், தப்பியோடி தப்பியோடி சாலையில் சுற்றித்திரிந்த 20 நெருப்புக் கோழிகளை பொலிசார், வாகனத்தில் துரத்திப் பிடிக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுமார் 20 நெருப்புக்கோழிகள் வளர்ப்பிடத்தில் இருந்து தப்பித்து, சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி அங்கு சென்ற பொலிசார், தப்பியோடிய நெருப்புக்கோழிகளை பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

ஒரு நெருப்புக்கோழி சாலையில் வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.