Reading Time: < 1 minute
கனடாவில் இதுவரை பட்டியலிடப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் வரிசையில் மேலும் நூற்றுக்கணக்கான புதிய ஆயுதங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
இது தொடர்பான அறிவிப்பு உடன் அமலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஏற்கன இந்த ஆயுதங்ளை சட்ட ரீதியான முறையில் கொள்வனவு செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் எனவும் அவர்கள் அவற்றை ஒப்படைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆயுதங்கள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டமை குறித்து கனடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லீபிலான்க், பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் உள்ளிட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
துப்பாக்கிகள் மூலம் இடம் பெற்று வரும் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.