Reading Time: < 1 minute

கனடாவில் தடை செய்யப்பட்ட ஆயுதம் ஒன்றை வைத்திருந்த பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் அமெரிக்க கனடியே எல்லை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ரசல் வெர்னோன் மேஜர் என்ற நபர் அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பிக் கொண்டிருந்தபோது எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையை நடத்தியுள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனடிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் வாகனத்தை சோதனையிட்டபோது சட்டவிரோத ஆயுதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது மேலும் ஒரு தொகுதி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக ஆயுதத்தை நாட்டுக்குள் கடத்தியதாக மேஜர் மீது குற்றம் சுமத்தி வழக்கு தொடக்கம் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபருக்கு கனடிய நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.