ஒன்ராறியோவில் 9 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய தங்கம் மற்றும் வெள்ளியை தொடர்புடைய வங்கியே வாங்க மறுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒன்ராறியோவை சேர்ந்த லிண்டா கேட்ஹவுஸ் என்பவர் கடந்த 2013ல் ஸ்கோடியவங்கியில் இருந்து வாங்கிய தங்கம் மற்றும் வெள்ளியையே தற்போது குறித்த வங்கி திரும்ப வாங்க மறுத்துள்ளது.
வங்கியின் செயலால் அதிர்ச்சியில் இருந்து மீளாத குறித்த பெண்மணியிடம் தற்போது விலைமதிப்பற்ற உலோக வணிகத்தில் வங்கி ஈடுபடவில்லை எனவும், அடகு வியாபாரம் செய்பவர்களிடம் விற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.
2013ல் ஸ்கோடியவங்கியில் இருந்து ஒரு அவுன்ஸ் $22 என மொத்தம் $110க்கு ஐந்து அவுன்ஸ் வெள்ளி வாங்கியுள்ளார். மேலும், ஒரு அவுன்ஸ் $1,376 என 6,880 டொலர்களுக்கு ஐந்து அவுன்ஸ் தங்கம் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது தமது மகனுக்கு உதவும் பொருட்டு தம்மிடம் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் ஸ்கோடியவங்கி கூறியுள்ள பதில் தமக்கு ஏற்புடையதாக இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவின் எஞ்சிய நான்கு பெரிய வங்கிகள் தற்போதும் விலைமதிப்பற்ற உலோக வணிகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் அவர்களிடம் இருந்து வாங்கிய தங்கம் மற்றும் வெள்ளிகளை மட்டுமே அவர்கள் திரும்ப வாங்குகின்றனர்.
ஸ்கோடியவங்கி தம்மைப் போன்ற வாடிக்கையாளர்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும், அவர்களிடமே இருந்தே தங்கமும் வெள்ளியும் வாங்கியுள்ளதால், அதில் அவர்களின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக அவர்களே உரிய நவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்ஹவுஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவில் தற்போது தங்கத்தின் விலை 10,800 டொலர் எனவும் வெள்ளியின் விலை 125 டொலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.