Reading Time: < 1 minute

கனடாவின் ஒட்டாவாவில் தகாத செயலில் ஈடுபட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒட்டாவா பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய 53 வயதான மார்க் பெட்டர்சன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் உயர் அதிகாரியான பெட்டர்சன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு மே மாதம் வரையில் குறித்த உயர் பொலிஸ் அதிகாரி குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை குறித்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த அதிகாரிக்கு எதிராக ஜுன் மாதம் முறைப்பாடு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து அவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாலியல் குற்றச் செயல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் மிக உன்னிப்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் எவ்வித நெகிழ்வுப் போக்கும் காண்பிக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கைது செய்பய்பட்ட பெட்டர்சன், நிபந்தனை அடிப்படையில் பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.