Reading Time: < 1 minute

2003 மற்றும் 2004 கொரோலா, கொரோலா மெட்ரிக்ஸ் 2004, 2005 ரேவ்4எஸ் (2003 and 2004 Corolla and Corolla Matrix models as well as 2004 and 2005 RAV4s.) ரக காரில் காணப்படும் எயார் பேக்கில் (Takata airbag) கோளாறு காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எயார் பேக்குகள் வெடித்துச் சிதறக்கூடியவை எனவும் இதற்குள்ளிலிருந்து சில கூரிய ஆபத்தான பொருட்கள் வெளிப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் இந்த வாகனங்கள் தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கனடாவில் இவ்வாறான சுமார் 7300 கார்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரையில் அமெரிக்காவில் இந்த எயார் பேக் கோளாறு காரணமாக 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உலக அளவில் 30 பேர் கொல்லப்பட்டதுடன், 400 பேர் காயமடைந்துள்ளனர்.