கனடாவில் ஜெலிபோக் எனப்படும் உணவு வகைகளில் லிஸ்டிரியா தொற்று தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இது தொடர்பில் எச்சரிக்கையை விடுத்திருந்தது.
எவ்வாறு எனினும் வேக்னஸ் என்ற பண்டக்குறியை கொண்ட ஒரு உற்பத்தியை முன்னிலைப்படுத்தி இந்த எச்சரிக்கையை விடுக்கப்பட்டு இருந்தது.
எனினும் தற்பொழுது இந்த வகை உணவுப் பொருள் விற்பனை செய்யும் பல நிறுவனங்களினதும் உற்பத்திகள் லிஸ்ட்டீரியா தொற்றினால் பாதிப்புற்றிருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ம் திகதி இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஸ்ட்ராஸ்கீ,க்ளோஸ்கீ யூரோ புட், லேடி யோர்க் புட், விலேஜ் பேக் சொப் விட்டபி உள்ளிட்ட சில பண்டக்குறிகளைக் கொண்ட உற்பத்திகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹாம் என் ஜெல்லி, போர்க் ஹெட் சீஸ், லியன் ஹாம் ஜெல்லி உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகளில் இந்த லிஸ்ட்டீரியா தொற்று தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக டொரன்டோ பெரும்பாகப் பகுதியில் இந்த வகை உற்பத்திகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
எனவே இந்த வகை உணவுப் பொருட்களை பயன்படுத்தும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.