கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், ரொறன்ரோ நகரத்தின் சிஎன் கோபுரத்திற்கு மேலே, நேற்று (19) அதிகாலை பிரகாசமான ஒளியுடன் நெருப்பு பந்து (Fireball) ஒன்று வேகமாக பாயும் காட்சி காணப்பட்டது.
அது ஒரு சிறிய விண்கல் என்றும், அது பூமியில் விழுவதற்கு முன்பு நயாகரா நீர்வீழ்ச்சிக்கு மேல் ஒரு தீப்பந்தம் போல் காட்சியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை அதிகாலையில் #C8FF042 என பெயரிடப்பட்ட மற்றும் சுமார் ஒரு மீட்டர் விட்டம் கொண்ட விண்கல்லின் வீடியோவைப் பகிர்ந்து, அது CN டவரைக் கடந்து சென்றது என ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) அதன் அதிகாரப்போர்வை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அந்த விண்கல் பூமியுடன் தாக்கப்படுவதற்கு முன்பு விண்வெளியில் கண்டறியப்பட்ட ஆறாவது பொருள் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) தெரிவித்துள்ளது. ESA பகிர்ந்த தெளிவான வீடியோவில், வானத்தில் பறக்கும் தீப்பந்தம் பார்ப்பதற்கு ஒரு அழகான காட்சியாக இருந்தது.
நியூயார்க் டைம்ஸ் (NYT) படி, சூரிய மண்டலத்தில் உள்ள பொருட்களைக் கண்காணிக்கும் மைனர் பிளானட் சென்டர், ஒன்ராறியோவின் பிரான்ட்ஃபோர்டுக்கு மேல் சனிக்கிழமை அதிகாலை 3:27 EST (1:57 pm IST) மணிக்கு பூமியின் வளிமண்டலத்தில் விண்கல் நுழைந்தது.
C8FF042 என்ற தற்காலிகப் பெயருடன் வேகமாக நகரும் பொருள் அரிசோனாவின் டக்ஸனுக்கு அருகிலுள்ள மவுண்ட் லெமன் சர்வேயில் எடுக்கப்பட்ட படங்களில் கண்டறியப்பட்டதாக மைனர் பிளானட் சென்டர் தெரிவித்துள்ளது.
ஃபயர்பால் (Fireball) என்பது மிகவும் பிரகாசமான விண்கல் ஆகும், இது பொதுவாக காலை அல்லது மாலை வானத்தில் வீனஸை விட பிரகாசமாக இருக்கும் என்று அமெரிக்க விண்கற்கள் சங்கம் கூறுகிறது.
சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, மேரிலாந்து, நியூயார்க், ஓஹியோ, பென்னு மற்றும் ஒன்ராறியோவில் உள்ள மக்களிடமிருந்து ஒரு தீப்பந்தம் பற்றிய 33 அறிக்கைகளை அமெரிக்க விண்கற்கள் சங்கம் பெற்றுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.