கனடாவில் சீக்கியர் ரிபுதமான் சிங் மாலிக் (Ripudaman Singh Malik) கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டொராண்டோ, ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் 1985-ம் ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 329 பேர் கொல்லப்பட்டது, கனடா வரலாற்றின் கருப்பு அத்தியாயம் ஆகும்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விடுதலையானவர், சீக்கிய தொழில் அதிபர் ரிபுதமான் சிங் மாலிக் (Ripudaman Singh Malik) . இவர் கடந்த 14 ஆம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைதானவர்ல்கள் டானர் பாக்ஸ் (வயது 21), ஜோஸ் லோபஸ் (23) ஆவார்கள்.
எனினும் அவரது கொலையின் பின்னணி என்ன என்பது இன்னும் தெரிய வராத நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.