Reading Time: < 1 minute

கனடாவின் முன்னணி சிறுவர் தானிய உணவு பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றின் பிரதான உற்பத்திகள் இரண்டை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு கனடிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.

கெர்பர் பண்டக்குரியை கொண்ட ஓட் பனானா மற்றும் மேங்கோ பேபி சீரியல் உணவு வகைகள் இவ்வாறு சந்தையிலிருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உணவு வகையில் ஒருவகை பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த கொரோனோ பாக்டர் என்ற பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த உணவு பொருள் வகைகள் சந்தையிலிருந்து மீள பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என கனடிய சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆல்பர்ட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா, நியூ பிரவுன்ஸ்வுக், ஒன்றாரியோ, கியூபிக், சஸ்கட்ச்வான் மற்றும் சில மாகாணங்களில் இந்த உணவுப் பொருள் இணைய வழியில் விற்பனை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

227 கிராம் எடையுடைய பக்கெட்களில் இந்த உணவுப் பொருள் விற்பனை செய்யப்பட்டதாகவும் இந்த உணவுப் பொருளின் காலாவதி திகதி அடுத்த ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உணவு பொருட்களை நுகர வேண்டாம் என கனடிய சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த உணவு வகையை பார்க்கும் போது எவ்வித பாதிப்பும் ஏற்பட்டது தென்படாது எனவும் துர்நாற்றம் வீசாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இவற்றை உட்கொள்வதனால் உபாதைகளை எதிர் நோக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது சிசுக்களை பாதிக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.