நார்த் யோர்க் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் காயமடைந்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒண்டாரியோ பொலிஸ் சிறப்பு விசாரணை பிரிவு (SIU) இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக ஹம்பர் சம்மிட் (Humber Summit) பகுதியில், இஸ்லிங்டன் அவென்யூ & சாட்டர்லி வீதி அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டொராண்டோ பொலிஸின் “Gun and Gang Unit” அலகு, சந்தேகத்திற்கு இடமான வாகனமொன்றை கண்காணித்து வந்தது.
வாகனத்தில் பலர் இருந்த நிலையில், ஒரு நபருடன் மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
17 வயது சிறுவன் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் – அவர் தற்போது உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் உள்ளார்.
வாகனத்தில் இருந்த மற்ற நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசாரின் செயல்பாடுகள் குற்றவியல் சட்டத்தை மீறியதா என்பதை SIU விசாரணை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.