Reading Time: < 1 minute
கனடாவின் ரொறன்ரோவில் சிம் ஸ்வாப் அல்லது சிம் அட்டைகளை கொண்டு மோசடி செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவரின் சிம் அட்டைக்குள் ஊடறுத்து மோசடிகள் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு நபர்களின் அலைபேசிகளுக்குள் ஊடக வங்கி கணக்குகளில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த நபர்களுக்கு எதிராக 108 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
சிலர் ஐயாயிரம் டொலர்களுக்கு மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆள்மாறட்டம் செய்து சிம் அட்டைகளின் முக்கியமான தகவல்களை பெற்றுக்கொண்டு இந்த மோசடி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பத்து பேர் கைது செய்யப்பட்ட போதிலும் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.