Reading Time: < 1 minute

கனடாவில் சிசுக்கள் மர்மமான முறையில் மரணித்தமைக்கான காரணங்கள் அம்பலமாகியுள்ளன.

கடந்த 2009ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான ஒரு தசாப்த காலத்தில் 1338 சிசுக்கள் மர்மமான முறையில் மரணித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

உரிய முறையில் நித்திரை செய்யாமையினாலேயே இந்த சிசுக்கள் உயிரிழந்துள்ளதாக நீண்ட மருத்துவ ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் சிசுக்களின் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கையில் வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டாலும் பாதுகாப்பான முறையில் நித்திரை கொள்ளாமையே இந்த மரணங்களுக்கான பிரதான ஏதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிறந்த குழந்தைகள் உரிய முறையில் நித்திரை கொள்வதற்கு சந்தர்ப்பம் இல்லாத போது மூச்சு விடுவதில் ஏற்படும் அசௌகரியங்களினால் மரணங்கள் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

சின்னஞ் சிறு சிசுக்களை எவ்வாறு உறங்கச் செய்வது என்பது குறித்து ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.