Reading Time: < 1 minute

கனடாவில் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்படைய சந்தேக நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேக நபரின் ஜாக்கெட்டிலிருந்து பச்சை மர மலைப்பாம்பு ஒன்று நழுவியதனை கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கனடாவின் ஹமில்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹமில்டனின் கிங் வீதியில் அமைந்துள்ள பாம்பு விற்பனை நிலையமொன்றில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த பாம்பின் பெறுமதி சுமார் 2000 டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 20 வயதான பச்சை மர மலைப்பாம்பு ஆரோக்கியமாக இருப்பதாகவும், களவாடப்பட்டதனால் பயந்து விட்டதாகவும் கடையின் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாம்பு விசமுடையதல்ல எனவும், எனினும் ஆபத்தானது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவுஸ்திரேலியா, நியூ கியூனா போன்ற நாடுகளில் இந்த பாம்பு வகைகள் காணப்படுகின்றன.

கனடாவில் கடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த பாம்பு விற்பனைக்கானதல்ல எனவும், இது காட்சிப்படுத்தும் நோக்கில் வளர்க்கப்பட்டு வருவதாகவும் கடைப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.