கனடாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஆறு பேரும் வாகன விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பேரே நகரத்திற்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேரே நகரின் மெக்கே வீதி மற்றும் கவுன்டி வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிகாலை வேளையில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஆறு இளம் வயதினர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த அனைவரும் தங்களது இருபது வயதுகளை உடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆறு பேரைக் காணவில்லை என பொலிஸாரிடம் முன்னதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த ஆறு பேரும் வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக பேர நகர மேயர் ஜெப் லெமன் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் ஆறு குடும்பங்கள் பெரும் துயரத்தை சந்தித்துள்ளதாகவும் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் பற்றிய விபரங்கள் ஏதேனும் தெரியவந்தால் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.