Reading Time: < 1 minute
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 876பேர் பாதிக்கப்பட்டதோடு 131பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 66ஆயிரத்து 103பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 19ஆயிரத்து 664பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 57ஆயிரத்து 020பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 848பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஆறு இலட்சத்து 89ஆயிரத்து 419பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளன.