Reading Time: < 1 minute
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 845பேர் பாதிக்கப்பட்டதோடு 172பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து 28ஆயிரத்து 354பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14ஆயிரத்து 597பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 75ஆயிரத்து 305பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 715பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நான்கு இலட்சத்து 38ஆயிரத்து 452பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.