கனடாவில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நயாகரா பகுதியில் உள்ள ஒன்பது உள்ளூர் வர்த்தக நிறுவனங்களுக்குள் புகுந்து 35000 டொலர் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை திருடியதாகக் கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பெல்ஹாமில் கடந்த மாதம் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் கடைகளை உடைத்து பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் பாதுகாப்பு பெட்டகத்தை குறி வைத்து செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களை அடையாளம் கண்ட பின்னர், கடந்த 3 ஆம் திகதி தேடுதல் உத்தரவு நிறைவேற்றப்பட்டதாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து ஆடைகள், காலணிகள், வாகனங்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
29 வயதான சந்தேகநபர்கள் ஜொனாதன் அன்ட்ரூ மாமோன் மற்றும் ஸ்டீவன் அந்தனி மாமோன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சகோதரர்களுக்கு எதிராக ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.