கனடாவின் மாண்ட்ரீல் (Montreal) பகுதியில் பிறந்து இரண்டு மாத பச்சிளம் குழந்தை ஒன்று கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாண்ட்ரீல் பகுதியில் அமைந்துள்ள Sainte-Justine மருத்துவமனையிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட குழந்தை, பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டிசம்பர் 16ம் திகதி சிகிச்சை பலனின்றி குழந்தை மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதை சூழலில் குழந்தை மரணம் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிடுவது என்பது முறையல்ல என மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
கியூபெக் பிராந்தியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பிராந்திய நிர்வாகம் கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவந்த நிலையிலேயே, கொரோனாவிற்கு குழந்தை மரணமடைந்த தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை மட்டும் கியூபெக் பிராந்தியத்தில் புதிதாக 3,768 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில் 312 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதில் 62 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.