கனடாவில் இந்திய வம்சாவளி பாடசாலை மாணவர் Karanveer Sahota கத்திக்குத்து தாக்குதலில் மரணமடைந்த சம்பவத்தில் 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கனடாவின் எட்மண்டன் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 16 வயது Karanveer Sahota மாணவர் கொடூரமாக தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
ஏப்ரல் 8ம் திகதி நடந்த இத்தாக்குதலை அடுத்து சிகிச்சை பெற்றுவந்த அவர், சம்பவம் நடந்து ஒருவாரத்திற்கு பின்னர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை வெளியான உடற்கூராய்வு அறிக்கையில், மார்பில் குத்தப்பட்ட காயமே மரணத்திற்கு காரணம் என்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து , எட்மண்டன் பொலிசார், 17 வயது பெண், இரண்டு 16 வயது ஆண்கள், இரண்டு 15 வயது ஆண்கள் மற்றும் இரண்டு 14 வயது ஆண்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மீது முதலில் கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மாணவர் Karanveer Sahota மரணமடைந்த நிலையில், கொலை வழக்கு பதிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மரணமடைந்த மாணவர் Karanveer Sahota மற்றும் ந் சந்தேக நபர்களும் நன்கு அறிமுகமானவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.