Reading Time: < 1 minute

கனடாவில் கல்கரியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் தனது தாயை படுகொலை செய்துள்ளதாக போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் இந்த நபர் மற்றுமொரு பெண்ணையும் படுகொலை செய்ய முயற்சித்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை downtown பிரதேசத்தில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இந்த படுகொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் தாக்குதலுக்கு இலக்கானதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பெண்களையும் பொலிசார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் குறித்த நபரின் தாயான சோல் ஹார்டர் என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏனைய பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பெயரில் 32 வயதான ஜோன் பற்றிக் பொன் ஹார்டர் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என கரடிய போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த பெண்ணின் மரண விசாரணை அறிக்கை இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளது.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அதனை போலீசாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என்ன காரணத்திற்காக இந்த படுகொலை மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.