Reading Time: < 1 minute

கனடாவில் அதிகளவில் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டில் அதிகம் பிரபல்யமான குழந்தைப் பெயர்கள் குறித்த விபரங்களை கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டில் அதிகம் பிரபல்யமான குழந்தைப் பெயர்களின் விபரங்களே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக கனடாவில் அதிகம் பிரபல்யமான பெண் குழந்தை பெயராக ஒலிவியா (Olivia) காணப்படுகின்றது.

கடந்த 2022ம் ஆண்டில் ஒலிவியா என்ற பெயர் 1804 தடவைகளும், எம்மா (Emma) என்ற பெயர் 1550 தடவைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சார்லட், அமெலியா, சோபியா, சோல், மியா, எவா, லிலி மற்றும் மிலா ஆகிய பெயர்களே அடுத்த மூன்று முதல் பத்து இடங்களை பிடித்துக் கொண்டுள்ளன.

இதேவேளை, அதிக பிரபல்யமான ஆண் குழந்தை பெயராக நோவா (Noah) முதலாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஆண் குழந்தைகளுக்காக சூட்டப்பட்ட பெயர்களின் வரிசையில் இரண்டாம் இடத்தை லியாம் மற்றும் மூன்றாம் இடத்தை வில்லியம் ஆகிய பெயர்கள் பெற்றுக்கொண்டுள்ளன.