Reading Time: < 1 minute

கனடாவில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய 42 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த 42 பேருக்கு எதிராகவும் சுமார் 400 குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சுமார் ஓராண்டு காலமாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 173 துப்பாக்கிகளை போலீசார் மீட்டுள்ளனர்.

டொரன்டோ போலீசார் யோக் பிராந்திய போலீசார், டர்ஹம்ம் போலீசார், ஒன்றாரியோ மாகாண போலீசார், கனடிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு பிரிவு என்பன கூட்டாக இணைந்து இந்த நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களிடமிருந்து பாரிய அளவிலான போதை பொருட்கள் பணம் மற்றும் ஆயுதம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் இந்த போதைப்பொருள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளி கும்பல்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

போலீசாரினால் இவ்வாறு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் என்பன கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணைகளில் பெரும் எண்ணிக்கையிலான சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்தது என போலீசார் தெரிவிக்கின்றனர்.