Reading Time: < 1 minute

கனடாவில் குறுஞ்செய்திகள் மூலம் இடம்பெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயமாக செலுத்த வேண்டிய அரசாங்கப் பயன்கள், அபராதங்கள் அல்லது மின்சாரக் கட்டணங்கள் போன்ற காரணங்களை கூறி, நபர்களின் பணத்தையும், அடையாளத்தையும் திருட, மோசடிக்காரர்கள் ‘Smishing’ (SMS Phishing) முறையை பயன்படுத்துகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

2025-ல் அடையாளத் திருட்டு (Identity Theft) குறித்து 64% கனேடியர்கள் தங்களது கரிசனையை வெளியிட்டுள்ளனர்.

உங்கள் அரசு நலன்பெறுதல் கிடைக்கிறது செலுத்தப்படாத கட்டணம் உள்ளது உங்கள் வங்கி தகவலை புதுப்பிக்க வேண்டும் போன்ற குறுஞ் செய்திகளில் உள்ள லிங்கை நீங்கள் கிளிக் செய்தால், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுளு;ளது.

“நீங்கள் பயன்படுத்தும் சேவையிலிருந்தே வந்தது போல் தோன்றும் என்பதால், இது உண்மையானது என நம்பிவிடுவீர்கள்,” என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அறியாத நபர்களிடமிருந்து வந்த லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் எனவும், கைபேசி பாதுகாப்பு மென்பொருளை (Security Updates) தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளை உடனே அழிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.