கனடாவில் கடந்த 9 தினங்களில் குரங்கமை நோய் 59 வீதத்தினால் அதிகரித்துள்ளது கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் இந்த தகவல்களை வெளியேற்றுள்ளது.
கனடாவில் தற்போது மொத்தமாக 477 குரங்கம்மை நோய் தொற்று ரீதியாளர்கள் பதிவாகியுள்ளனர் கடந்த நான்காம் திகதி முதல் இதுவரையில் 177 பேர் குரங்கம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது 59 வீத அதிகரிப்பு எனவும் கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை நோயாளிகள் அதிக அளவில் கியூபெக் மாகாணத்தில் பதிவாகி வருவதாகவும் மொத்தமாக 254 பேர் குரங்கமை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அல்பர்ட்ரா போன்ற மாகாணங்களிலும் நோய் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக அளவில் குரங்குமை நோய் தொற்றாழைகளின் எண்ணிக்கை 10400 எனவும் சுமார் 60 நாடுகளில் குரங்கம்மை நோய் தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் அதிக அளவில் குரங்கம்மை நோய் தொற்று உறுதியாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
குரங்கமை நோய் தொற்று தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.