கனடாவில் குரங்கம்மை தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க கண்டத்தின் வேறும் சில நாடுகளில் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும், கனடாவில் இந்த எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிவதாக தெரிவித்துள்ளது.
உலகின் மொத்த குரங்கம்மை தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளதாகவும், எனினும் கனடாவில் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து செல்வதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அடானாம் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் தெளிவான வீழ்ச்சியை அவதானிக்க முடிவதாக தெரிவித்துள்ளார்.
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக இவ்வாறு நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இதுவரையில் 1228 குரங்கம்மை தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளதுடன் இதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.