Reading Time: < 1 minute
மிஸ்ஸிசாகா பகுதியில் குப்பை வண்டி ஒன்றில் மோதி பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
எக்லிங்டன் மற்றும் எரின் மில்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் வீதியை கடந்து செல்லும் போது குப்பை லாரி மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகன விபத்தில் பலத்த காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தினை மேற்கொண்ட சாரதி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.