Reading Time: < 1 minute

கனடாவில் பெண் மருத்துவர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எட்மோன்டனில் குடும்ப மருத்துவராக கடமையாற்றிய டொக்டர் யிப்பி ஷீ என்பவருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

அல்பர்ட்டா வரலாற்றில் மிக பெரிய மருத்துவ மோசடியில் இந்த மருத்துவர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கட்டணம் அறவீடு செய்யும் போது இவ்வாறு மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்காக நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் மருத்துவர் 827077 டொலர்கள் மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நூற்றுக் கணக்கான நோயாளிகளிடமிருந்து இவ்வாறு மோசடியான முறையில் பணம் அறவீடு செய்துள்ளதாக குறித்த மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

உளவியல் மருத்துவ ஆலோசனை வழங்குவதாக கூறி பணம் அறவீடு செய்த போதிலும் குறித்த பெண் மருத்துவர் ஊரிய சேவையை வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தன்னை சந்திக்க வரும் அனைத்து நோயாளிகளுக்கும் உளவியல் ஆலோசனை வழங்குவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டுள்ளார்.

குற்றச் செயலை குறித்த மருத்துவர் ஒப்புக் கொண்டுள்ளார். பணம் மீது கொண்ட பேராசை காரணமாக இவ்வாறு செய்ததாக குறித்த பெண் மருத்துவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.