கனடாவில், புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 50க்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இவ்வாறு வாகன சாரதிகளை பரிசோதனை செய்துள்ளனர்.
அல்ஹகோல் மற்றும் போதைப் பொருள் பயன்படுத்திய சாரதிகளுக்கு இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி பிற்பகல் 3.00 ஜனவரி மாதம் 1ம் திகதி பிற்பகல் 3.00 மணி வரையில் இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் செலுத்திய அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் றொரன்டோ பெரும்பாக பகுதியில் பதிவாகியுள்ளது.
புத்தாண்டை துரதிஸ்டவசமாக சிலர் பொறுப்புணர்ச்சியின்றி கொண்டாடியுள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்துகின்றனர்.
குடித்தால் வாகனம் செலுத்த வேண்டாம், வாகனம் செலுத்தினால் குடிக்க வேண்டாம் இதுவே எமது அறிவுரை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.