கனடாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் உலகில் உருளைக்கிழங்கு வறுவல் துண்டுகளுக்கும் (French Fries) கடுகுக்கும் பற்றாக்குறை நிலவுகிறதாக கூறப்படுகின்றது.
கனடாவின் சில இடங்களில் வறட்சி நிலவுகிற அதேவேளை மறுபக்கம், சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறிப்பாக, உருளைக்கிழங்கு, கடுகு ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அதன் தாக்கம் ஜப்பானிலும் தென்படுகிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜப்பானின் McDonald’s கிளைகளில் உருளைக்கிழங்கு வறுவல் துண்டுகள் சிறிய அளவில் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.
அதேவேளை கனடா, கடுகின் ஆகப் பெரிய உற்பத்தியாளராக உள்ள நிலையில், கடுகின் விலை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கனடாவில் தானிய உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதாகக் கூறப்படும் அதேவேளை சோளத்தின் உற்பத்தி மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.