Reading Time: < 1 minute

கனடாவில் அண்மைக்காலமாக கார் விலைகளில் அதிகரிப்பு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கார்களைப் போலவே பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விலையும் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் சராசரியாக புதிய காரொன்றின் விலை 66288 டாலர்கள் என பதிவாகியுள்ளது.

இது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 21.3 வீத அதிகரிப்பாகும்.

மேலும் பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றின் சராசரி விலை 39645 டாலர்கள் எனவும் இது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 4.1 வீத அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆட்டோ டிரைவர் நிறுவனத்தின் புதிய வாகன விலை சுட்டி குறிதத அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்களின் விலைகள் அதிகரித்துள்ள காரணத்தினால் கார்களை கொள்வனவு செய்வது தொடர்பான, கடன் மீள செலுத்துகை காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக 68 மாதங்களில் இந்த கடன் தொகை மீள செலுத்தப்பட்டதாகவும் தற்பொழுது 72 மாதங்கள் வரையில் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய கார்களை சந்தையில் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்கள் காரணமாக பலர் பயன்படுத்தப்பட்ட கார்களை கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.