கனடாவில் வோகன் பகுதியில் கார் ஒன்றை கொள்ளையிடுவதற்கு மேற்கொண்ட முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
மெக்கன்சி டிரைவ் மற்றும் பெஸ்ட் ரோட் ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் இந்த வாகன கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் பெண் ஒருவர் பயணிகள் பக்க ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் சந்தேக நபர் சாரதி பக்க கதவைத் திறந்து உள்ளே நுழைந்து பெண்ணை கீழே இறங்குமாறு துப்பாக்கி முனையில் அச்சிறுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் ஓடிச்சென்று இந்த கார் கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.
துப்பாக்கி முனையில் குறித்த நபர் வாகனத்தை கொள்ளையிட முயற்சித்துள்ளார்.
எனினும் அந்த இடத்திற்குச் சென்ற நல் உள்ளம் கொண்ட நபர் சந்தேக நபருடன் வாக்குவாதப்பட்டதாகவும் குறித்த சந்தேக நபர் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 18 முதல் 19 வயதான கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை இவ்வாறு கார் கொள்ளையில் ஈடுபட முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகிறது.